Hot Photo Gallery!

A social bookmarking and blogging site for all our Cinema News Members around the world. .....

Latest Movies Updates

Latest Movie Reviews, Trailers, Hot Cinema News For You...

Trendy Tamil Cinema News Updates

Latest Movie Reviews

Hot Actress Gallery

Find Your Favorite Actress Wallpapers...

Manmadhan Ambu – Movie Review

Kamalhasan And Madhavan


நடிப்பு - கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா
ஒளிப்பதிவு - மனுஷ் நந்தன்
இசை - தேவி ஸ்ரீ பிரசாத்
கதை - திரைக்கதை - வசனம் - பாடல்கள் - கமல்ஹாஸன்
இயக்கம் - கே எஸ் ரவிக்குமார்
தயாரிப்பு - உதய நிதி ஸ்டாலின்
பிஆர்ஓ - நிகில்

கமல் - கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் வந்திருக்கும் நான்காவது படம் மன்மதன் அம்பு. திரைப்பட உருவாக்கத்தில் புதிய பரிமாணம் இந்தப் படம் என்றால் மிகையல்ல.

அம்புஜாக்ஷி எனும் நிஷா (த்ரிஷா) ஒரு பிரபல நடிகை. அவருக்கு ஒரு பணக்கார காதலன் மதன் (மாதவன்). இந்தக் காதலுக்கு வேட்டு வைக்கிறது மதனின் சந்தேக புத்தி. காதலி சரியானவளா என்பதை துப்பறிந்து சொல்ல மேஜர் மன்னாரை (கமல்ஹாஸன்) நியமிக்கிறான் மதன். நண்பனின் கான்சரை குணப்படுத்த வேண்டி இந்த அஸைன்மென்டுக்கு ஒப்புக் கொள்கிறார் மன்னார். (மன்-கமல், மதன் - மாதவன், அம்பு - த்ரிஷா... பெயர்க் காரணம் புரிஞ்சிடுச்சா!).

நிஷா தன் பள்ளித் தோழி தீபாவின் (சங்கீதா) அழைப்பின்பேரில் வெனிசுக்குப் போகிறார். மன்னார் பின் தொடர்கிறார். நிஷாவைப் பற்றி உண்மையான விஷயங்களை மதனுக்கு ரிலே பண்ணுகிறார். அவையெல்லாமே நிஷாவை உண்மையானவளாகக் காட்ட, பணம் தர மறுக்கிறார் மதன். இதனால் பொய்யான விஷயங்களைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்தக் காதல் கடைசியில் என்ன ஆனது... கமலும் த்ரிஷாவும் என்ன ஆகிறார்கள் என்பது மீதிக் கதை.

கமல் நடிப்புக்கு புதிதாக சான்று தரத் தேவையில்லை. அசத்தலான அறிமுகக் காட்சியில் ஆரம்பித்து, அவர் வரும் அத்தனைக் காட்சிகளிலும் பார்வையாளர்களை வசப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அந்த பிளாஷ்பேக் காட்சியில் பிரமிக்க வைக்கிறார் கமல்.

த்ரிஷாவுக்கு வெகு அழகாகப் பொருந்துகிறது இந்த வேடம். விண்ணைத் தாண்டி வருவாயாவில் பார்த்ததை விட இன்னும் அழகான த்ரிஷா.

மாதவனுக்கு சற்று வில்லத்தனம் கலந்த ரோல். அம்மாவின் பேச்சைக் கேட்டு காதலியைச் சந்தேகப்பட்டு காதலை இழக்கும் காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆனால் இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் சங்கீதா. இரண்டு குழந்தைகளுக்கு தாய், ஆனால் விவாகரத்தான இளம் மனைவி... இந்த ரோலை இவரை விட தத்ரூபமாக வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.

ஓவியா, உஷா உதூப், ரமேஷ் அரவிந்த், ஊர்வசி என நிறைய நடிகர்கள், சின்னச் சின்ன பாத்திரங்களில் வருகிறார்கள். சூர்யா கவுரவ வேடத்தில் வந்து த்ரிஷாவுடன் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்.

தொழில்நுட்ப ரீதியில் இந்தப் படம் மகா நேர்த்தி. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக தேவி ஸ்ரீ பிரசாத் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. நீலவானம் பாடல் ஈர்க்கிறது.

நடிகர் கமல்ஹாஸனை பல காட்சிகளில் ஓவர்டேக் செய்கிறார் திரைக்கதை எழுதிய கமல்ஹாஸன். முதல் பாதியில் கமல்ஹாஸனின் அக்மார்க் அறிவுஜீவித்தனம் எட்டிப் பார்க்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் பக்கா ரவிக்குமார் படமாக பயணம் தொடங்கிவிடுகிறது.


Leave a Reply